தற்போதைய செய்திகள்

அர்ப்பிசம்பாளையம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி – அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அர்ப்பிசம்பாளையம் ஊராட்சியில் ரூ.32.37 லட்சத்தில் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி கட்டும் பணியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் வடவாம்பலம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை பொதுசுகாதார நிலைய புதிய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 62 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.93 லட்சம், 7 தொழில் குழுக்களுக்கு ரூ.10.50 லட்சம், புலம் பெயர்ந்து மீண்டும் திரும்பி வந்துள்ள திறன்பெற்ற 61 இளைஞர்களுக்கு ரூ. 61 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான தொழில்கடன் நிதியுதவி என மொத்தம் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.