தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னோடி – மாநிலம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஒலகடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பருவாச்சி, பெரியவடமலைபாளையம், ஒலகடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சார்ந்த 962 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 8 அம்மா நகரும் நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பரிசோதனைகள மேற்கொள்ளப்படுகிறது. பவானி தொகுதியில் மக்களின் தேவைகளை அறிந்து அனைத்து பகுதிகளிலும் தார் சாலைஇ இகுடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் திட்டங்கள்மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து இல்லங்களுக்கும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது.

மத்தியக் கூட்டுறவு வங்கியின் இணைப்பு சங்கங்கள் மூலம் முதியோர்ஓய்வூதிய தொகை நியாய விலைக்கடைகள் மூலம் பவானி நகராட்சி பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது – மாற்றுத்திறனாளிகளுக்கு அவரது இல்லங்கருக்கு நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் பவானி தாலூக்கா முழுவதும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றி மக்களை காக்கும் முதலமைச்சருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பின்னர் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியம் கேசரிமங்கலத்தில் ரூ 10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையக் கட்டிடம் அமைக்கும் பணியை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.