தற்போதைய செய்திகள்

இளைஞர்களின் எழுச்சியால் கழகத்தின் வெற்றி தொடரும் – பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உறுதி

திருநெல்வேலி

இளைஞர்களின் எழுச்சியால் கழகத்தின் வெற்றி தொடரும் என்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறினார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனைக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சங்கரலிங்கம், துணைச்செயலாளர் செவல் முத்துசாமி, இணைச்செயலாளர் ஞானபுனிதா, பார்வதி பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கழக அமைப்பு செயலாளரும், பாசறை துணை செயலாளரமான சின்னத்துரை, தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசியதாவது:-

ஜனநாயக இயக்கம் கொண்ட மாபெரும் இயக்கம் அ.தி.மு.க இங்கு தான் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் யூனியன் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பினர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் என பல பதவிகளும் உங்களை தேடி வரும். சுதந்திர தினம், குடியரசு தினம் எது என்று தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார்.

மக்கள் பணி எதுவும் செய்யாமல் முதல்வர் கனவில் இருக்கிறார். அது பலிக்காது. ஸ்டாலின் கூட்டுறவு கடன் ரத்து என பொய் பிரச்சாரம் செய்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றது. நாம் மென்மையாக இருந்ததால் இது நடந்தது. இது தானாக சேர்ந்த கூட்டம். உங்களுக்கு ஜனநாயக உள்ளாட்சி வாய்ப்பு வழங்கப்படும். வங்க தேசத்தில் பிறந்த ஆலோசகர் பிரசாத் கிஷோர் ஆலோசனையின் பேரில் ஸ்டாலின் செயல்படுகிறார். 2008-ல் எப்படி மாபெரும் வெற்றி பாசறை மூலம் பெற்றோமோ அதே வரலாற்று வெற்றி 2021லும் தொடர நீங்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பேரவை செயலாளர் ஜெரால்ட், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், மன்ற செயலாளர் பெரிய பெருமாள், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஹரிஹர சிவசங்கர், மாணவர் அணி இராஜேந்திரன், பாசறை தலைவர்கள் கபிரியல் தேவா, ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், அந்தோணி அமல்ராஜ், ராம சுப்ரமணியம், பாளை பகுதி செயலாளர் ஜெனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.