தமிழகம்

சுரேஷ் அங்கடி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்க நான் பிரார்த்திக்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை சமாளிக்க சர்வ வல்லமை உள்ள இறைவன் அவரின் குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.