சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

பத்திரிகை துறையில் சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தன் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை

பத்திரிகை துறையில் சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கதில் கூறியிருப்பதாவது:-

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட டாக்டர் பா.சிவந்திஆதித்தன் பிறந்த இத்தினத்தில், அவரது உழைப்பினையும், சாதனைகளையும் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.