தற்போதைய செய்திகள்

மக்கள் இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கி அம்மா அரசு சாதனை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

மக்கள் இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கி அம்மா அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்காக சுமார் 3 கி.மீ தூரம் முதல் 5 கி.மீ தூரம் வரை சென்று பொருட்கள் வாங்கி வருவதால் பல இடங்களில் பகுதி நேர கடைகள் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து பரிசீலனை செய்து பின்னர் தமிழகமெங்கும் 3501 அம்மா நகரும் கூட்டுறவுகடைகளை தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 21-ந்தேதி துவக்கி வைத்தார்.

இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1123 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 510 பகுதி நேர கூட்டுறவு கடைகளும் மொத்தம் 1633 கடைகள் செயல்படுகிறது. இதன்மூலம் 747376 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 212 கடைகளுக்கு அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் துவக்கவிழா ஆரணியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 13 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 13வாகனங்கள் மூலமாக 212 கடைகளுக்கு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்படுகிறது. இதன் மூலம் 25796 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். திருவண்ணாமலை, திருவண்ணாமலை ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு 20 நியாயவிலைக்கடைகளும், துரிஞ்சாபுரம், கீழபென்னாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு 32 கடைகளும், செங்கம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு 13 கடைகளும், தண்டராம்பட்டு 7 கடைகளும், கலசப்பாக்கம், போளூர், சேத்பட், 17 கடைகளும், ஆரணி கிழக்கு. மேற்கு ஆரணி பகுதிகளுக்கு 20 கடைகளும், செய்யார், வெம்பாக்கம் பகுதிகளுக்கு 18 கடைகளும்,

அனக்காவூர் பகுதிக்கு 13 கடைகளும், வந்தவாசி தெள்ளார் பகுதிகளுக்கு 16 கடைகளும், ஜமுனாமரத்தூர் நம்பியம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 41 கடைகளும், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 15 கடைகளுக்கு என மொத்தம் 212 கடைகளுக்கு அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் செயல் படவுள்ளது அப்பகுதி பொதுமக்கள் கூட்டுறவு கடைகளை தேடி செல்லாமல் வீட்டிலேயே இருக்கலாம். இனி குடும்ப அட்டைதாரர்களை தேடி கூட்டுறவு கடையை வரவழைத்து கழக அரசு சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.