தற்போதைய செய்திகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்

சென்னை

தனது கந்தர்வ குரலால் உயிரூட்டி பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு ஒட்டுமொத்த இந்திய இசையுலகிற்கே பேரிப்பாகும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களுக்கு தனது கந்தர்வ குரலால் உயிரூட்டி பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய இசையுலகிற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் கோடானு கோடி ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.