தற்போதைய செய்திகள்

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பவானி வட்டம், பவானி நகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் வட்டம், பட்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 673 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு நிரம்பி வருகின்றது கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கூட்டுறவு துறையின் மூலம் பயிர்கள், நகைகடன், சிறு வணிக கடன், கொரோனா சிறப்பு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி நியாயவிலைக்கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு உறுப்பினருக்கு தலா 2 முககவசங்கள் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் பவானி தாலுகா முழுவதும் பெறப்பட்டுள்ளமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும், முதலமைச்சரின் இத்திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்க்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. நியாய விலைக் கடைகளில் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. முதியோர் உதவித் தொகை தமிழகத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மழை நீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்த நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்க சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்து, அதனை துவக்கி வைத்துள்ளார்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.17 கோடி மதிப்பீட்டில் சுமார் 65 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். சாலை வசதிகள் தொகுதி முழுவதும் பழுதடைந்த சாலைகள் கண்டறிப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டு வருகிறது.

கால்நடை மருத் துவமனைகள் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாவின் அரசை பொறுத்தவரை மக்களின் நலனிற்காகவும், மக்களுக்காகவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தும் நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது. அம்மாவின் அரசிற்கு பொதுமக்கள் என்றென்றும் தங்கள் நல்லாதரவை வழங்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக உழைத்து வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து துறைகளிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே விநியோகிக்கும் பொருட்டு அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 673 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, விவசாயிகளுக்கு புல்நறுக்கும் கருவி உட்பட ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அரசு வழங்கும் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி பயனடைய வேண்டும். மேலும் கொரோனா தொற்று காலத்தில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும், கைகளை சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, யூனியன் சேர்மன் பூங்கோதை வரதராஜ், ஆவின் இயக்குநர் வாத்தியார் குப்புசாமி, வழக்கறிஞர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்க தலைவர்கள்தட்சிணாமூர்த்தி, கே.கே.விஸ்வநாதன், சித்தையன், ஏ.ராஜேந்திரன், சீனிவாசன், கராத்தே பெரியசாமி, ஆண்டியப்பன், எம்.ஆர்.துரை, ஈஸ்வரமூர்த்தி, பவானி ஏ.பிரகாஷ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், செல்வராஜ், ஆர்.கே.விஜய், வி.திருநாவுக்கரசு, கார்த்தி, விவேகானந்தன், சதீஷ்குமார் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்) பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.