தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திட்டவட்டம்

தூத்துக்குடி

மக்கள் விரும்பும் நல்லாட்சி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி என்று 69வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு 69 கிலோ எடையுள்ள கேக் வெட்டிகொண்டாடும் நிகழ்ச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா.சுதாகர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் ஆகியோர் தலைமையில் பண்டாரவிளையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

விடியல் தருவோம் என்று கூறிய தி.மு.க.வின் பேச்சை நம்பி வாக்களித்த மக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். நமக்கு ஏற்கனவே அம்மாவின் நல்லாட்சியை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையாதா என்று மக்கள் ஏங்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும் நாள் தான் எனக்கு மகிழ்ச்சியான நாள்.

எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி என்று அமைகிறதோ அன்று தான் எனக்கு உண்மையான பிறந்தநாள் ஆகும். ஆகவே விரைவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மாக்களின் நல்லாசியுடன் தமிழகத்தின் மக்கள் விரும்பும் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி அமைவது உறுதி.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார் செய்திருந்தார்.