தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு கழக ஆட்சியில் உடனடி தீர்வு – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி

பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு கழக ஆட்சியில் உடனடி தீர்வு காணப்படுகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் குரங்குபள்ளம், பிச்சன்கொட்டாய், மேல்பாட்சாப்பேட்டை, வர்ணதீர்த்தம், நாசன்கொட்டாய், இராயப்பன்கொட்டாய், திரு.வி.க.நகர், பழையப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.18.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக்கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் மேம்பாட்டு நிதியின் கீழ் அரூர் பேரூராட்சி, அம்பேத்கர் நகர் பேருந்து நிலையம், அம்பேத்கர் புது காலனி, திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய மின்கம்பத்துடன் கூடிய மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளதையும் என மொத்தம் 12 இடங்களில் ரூ.47.40 லட்சம் மதிப்பிலான திட்டபணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன்தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் முதலமைச்சர் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றிடும் அரசாக தமிழக அரசு உள்ளது. எனவே பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு ஆதரவு நல்கிடவேண்டும்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்பேசினார்.

முன்னதாக மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில், புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், சுவாசம் 2019-2020 திட்டத்தின் கீழ் கல்லாறு ஓடை புது ரெட்டியூர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில், புதிய தடுப்பணை கட்டுதல் என மொத்தம் ரூ.31.80 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டபணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி (அரூர்), ஒன்றியக்குழுத்தலைவர்கள் பொன்மலர் பசுபதி, உதயா மோகனசுந்தரம், அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், அரூர் வட்டாட்சியர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், தனபால் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் உள்பட கலந்து கொண்டனர்.