தற்போதைய செய்திகள்

எண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் சிகரங்களை தொடுவீர் – மாணவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

சென்னை

எண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் சிகரங்களை தொட வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி எம்.எஸ்.சஸ்மிதா மற்றும் மூன்றாமிடம் பிடித்த நீலகிரி மாணவி ஆர்.காவ்யா ஆகியோருக்கு என் பாராட்டுகள். தாங்கள் விரும்பிய பாடங்களை சிறப்பாக படித்து வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்.

இதேபோல் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த மாணவர் ஆர்.நவநீத கிருஷ்ணனுக்கு எனது பாராட்டுகள். விரும்பிய பாடத்தை படித்து எண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.