தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி மாணவிக்கு கழக அம்மா பேரவை நிதியுதவி – அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்- கடம்பூர் செ.ராஜூ வழங்கினர்

மதுரை

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவிக்கு கழக அம்மா பேரவை சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் வழங்கினர்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 44-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இதில் மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதயை சேர்ந்த பார்வையற்ற மாணவி பூர்ணசுந்தரி தேசிய அளவில் 286-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். இதையறிந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாணவி பூர்ணசுந்தரியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் கழக அம்மா பேரவை சார்பில் மதுரையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பூர்ணசுந்தரிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல ்தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் வழங்கினர்.

நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவி பூர்ணசுந்தரி முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், கழக அம்மா பேரவைக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.