திருவண்ணாமலை

அனக்காவூர் ஒன்றியத்தில் கழக கொடியேற்று விழா – தூசி கே.மோகன் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை

அனக்காவூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ெகாடியேற்று விழாவில் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றியத்திலுள்ள மேல்மா, வாழ்ச்சனூர், சவுந்தர்யாபுரம் கிராமங்களில் கழக கொடியேற்றுதல் மற்றும் கிளை கழகங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சி.துரை தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று கழக கொடியேற்றி 11 கிளை கழக நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.55 ஆயிரம் நிதியை தனது சொந்த செலவில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மக்கள் தேவைகளை அறிந்து கழக அரசு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் அம்மாவின் வழியில் ஆட்சி செய்து வருகின்றனர். பசுமை வீடு திட்டம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

செய்யாறு பகுதியில் சுமார் 40 கோடி ரூபாயில் தார் சாலை அமைக்கப்பட்டது, பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டது, கல்லூரியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் அமைக்கப்பட்டது, கல்லூரிக்கு ரூ.1 ேகாடி மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது, பலகிராமங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஏழ்மையானவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், புகைப்பட கலைஞர்கள், குடுகுடுப்பைக் காரர்கள் என பல்வேறு தரப்பினரை கண்டறிந்து அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் என செய்யாறு தொகுதியில் மட்டும் ஒருலட்சம் குடும்பத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சேவை செய்யும் கழக ஆட்சிக்கு என்றும் பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசினார்.