தற்போதைய செய்திகள்

வண்ணாங்குளம் கிராமத்தில் 120 பேரின் வீடுகளுக்கு பட்டா – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் 120 பேரின் வீடுகளுக்கு பட்டாக்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம். ஆரணி அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த ஆண்டு தமிழக முதல்வரின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றதில் 120 பேர் தாங்கள் வீடு கட்டி சுமார் 20 முதல் 40 ஆண்டுகளாகிறது. இதுவரை பட்டா கிடைக்கவில்லை என மனு தந்திருந்தனர். இம்மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனு வழங்கிய 120பேரின் வீட்டிற்கான பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று 120 வீடுகளுக்கான பட்டாக்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

நடைபெறுவது மக்கள் ஆட்சி உங்கள் குறைகளை தேடி வந்து நிவர்த்தி செய்யும் அரசு கழக அரசு. அதற்கு எடுத்துக் காட்டுதான் இந்நிகழ்ச்சி. உங்களை தேடி வந்து குறைகளை கேட்டோம் இதோ இப்போது உங்களை தேடிவந்து பட்டா வழங்குகிறோம் இதுதான் மக்களின் ஆட்சி மக்களின் தேவைகளை கண்டறிந்து செயல்படும் அரசிற்கு என்றும் ஆதரவு தாருங்கள், கழக அரசு ஆரணி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது தார் சாலை வசதி மட்டும் 47 கோடி ரூபாயில் செய்யப்பட்டுள்ளது. கண்ணமங்கலம் பேருந்து நிலையம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப் பட்டுள்ளது. ஆரணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அதற்கான் புதிய கட்டடம் கட்டும்பணியும் நடைபெற்று வருகிறது, ஆரணி கல்வி மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.

சூரிய குளம் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படவுள்ளது. ஆரணிக்கு காவேரி குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது, மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்த அரசுக்கு ஆரணி மக்கள் என்றும் ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், கொளத்தூர் ப.திருமால், ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், கண்ணமங்கலம் எம்.பாண்டியன், கே.டி.குமார், நகர மாணவரணி செயலாளர் குமரன், தகவல் தொழில் நுட்பபிரிவு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.