தமிழகம்

இராம.கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் இராம. கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் இராம. கோபாலன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இராம. கோபாலன் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

இராம. கோபாலனை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இராம. கோபாலனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.