தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

சென்னை

தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியில் 127-வது வார்டு கோயம்பேடு திருவீதி அம்மன் கோவில்தெரு, அரும்பாக்கத்தில் உள்ள வேலவன் நகர் 1-வது பிரதான சாலை மற்றும் அருவில் உள்ள பகுதியில் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீர்படுத்தவும், சாலையை மேம்படுத்தவும், குப்பைகளை அகற்றவும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகொளை ஏற்று தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி உடனடியாக அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து உடனடியாக சாலை மேம்படுத்தி தருமாரும், மீண்டும் மழைநீர் தேங்காமல், கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீர்படுத்தவும், சாலையை மேம்படுத்தவும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க உடனடியாக பணிகளை துவக்க செய்தார்.

இந்த ஆய்வின்போது சி.கே.முருகன், வட்ட செயலாளர் ஆர்.சேகர், தனசேகர், எல்.ரவி, விருகை.தனசேகர், முத்து, அண்ணாமலை, பூங்காவனம், தேவா, வடிவேலு, முஜிப்அகமது, திணேஷ் குமார், அரவிந்த், ராஜா, குணசேகரன், ஹரிவிருஷ்ணன், ராஜேஸ், பாலாஜி, கிரண், தீபக், சஞ்சய், வெண்ணிலவன், சகிலன், கார்த்திக், அருண், ராஜா, சம்பத், ரமேஷ், மணிகண்டன், மோகன்குமார், சாமிகண்ணு, எல்.ரவி, மது, பூங்காவனம், சாமிகண்ணு, சுரேந்தர், ஜெயராஜ், தேவா, குமார், சினிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.