திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கோயில்கள் கடந்த 1-ந்தேதி முதல் வழிபாட்டுக்கு திறக்க அரசு அனுமதித்தது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுகின்றனர். இன்று (அக்டோபர் 1-ந்தேதி) அதிகாலை 1.10 மணி முதல் 2-ந் தேதி அதிகாலை 2:55 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் திருவண்ணாமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.