அரியலூர்

அரியலூர் அரசு கலை கல்லூரியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தற்காலிகமாக இக்கல்லூரிக்கான வகுப்புகள் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலையில் ஜெயங்கொண்டம் அரசு கலைகல்லூரியில் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) உஷா, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜமூர்த்தி, கோட்டாட்சியர் பூங்கோதை, நகராட்சி ஆணையர் அறச்செல்வி, வட்டாட்சியர் கலைவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அருளப்பன், கல்லூரி பேராசிரியர்கள் கருணாகரன், கலைசெல்வன், பவானி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.