தற்போதைய செய்திகள்

பச்சைத் துண்டு அணிபவர்கள் விவசாயிகள் ஆகிவிட முடியாது – அமைச்சர் சி.வி.சண்முகம் பேடடி

விழுப்புரம்

பச்சைத் துண்டு அணிபவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகி விட முடியாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் 938 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 73 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பச்சைத் துண்டு அணிந்தவர்கள் எல்லாம் விவசாயி ஆகி விட முடியாது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் ஏனென்று சொன்னால் திமுக என்றாலே விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பார்கள். விவசாய வீட்டை அபகரிக்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.

மேலும் 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களும், கனிமொழி அவர்களும் மக்களுடைய கோடிக்கு மேல் ஊழல் செய்தது அனைவருக்கும் தெரியும். அதுவும் வருகின்ற ஐந்தாம் தேதி முதல் 2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் டெய்லி தினமும் வழக்கு நடைபெறும் என்று நீதிமன்றமே கூறி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஊழலைப் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பேச அருகதையில்லை.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.