தற்போதைய செய்திகள்

பெரிய மாங்கோடு கிராமத்தில் மானிய விலையில் டீசல் பங்க் – சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர்

பெரிய மாங்கோடு கிராமத்தில் மானிய விலையில் டீசல் பங்க் அமைக்கும் பணியை சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு கிராமத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் அரசு மீன்வளத் துறை சார்பில் மானிய விலையில் புதிய டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் புதிய டீசல் பங்கிற்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சாதி சான்று, வருமானச் சான்று, ஆதரவற்ற விதவை சான்று, மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் மதிவாணன், ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாங்கோடு மோகன், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, பூங்குளம் ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் பேரவை தலைவர் சங்கர், மாவட்ட மீனவர் அணி இணை செயலாளர் ஏலன், மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் காண்டீபன், 15 வது வட்ட கழக செயலாளர் காமராஜ், பொன்னேரி துர்கா பிரசாத், கோளூர் சம்பத், அம்மா பேரவை தலைவர் ஆறுமுகம், கந்தன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நாகராஜ், தேவராஜ், சீனன், கேசவன், ஏசு, துரை, தேவன், குமார், கிளை செயலாளர் ஆறுமுகம், ராஜேந்திரன், மற்றும் கழக மீனவர் அணி நிர்வாகிகள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.