தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஜமீன்தார் கட்சி! தொண்டர்களை மதிக்கும் ஒரே இயக்கம் கழகம் – அமைச்சர் டி. ஜெயக்குமார் பேட்டி

சென்னை

தொண்டர்களை மதிக்கும் ஒரே இயக்கம் கழகம் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் ரூ 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சர்வதேச முதியோர் தினம் இன்று. முதியோரை மதிக்க வேண்டும். முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இதனை மதிக்க வேண்டும். அவர் வயதுக்கு ஏற்ப பேசவேண்டும். அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்று கொள்ள வேண்டும். அவர்களை தரக்குறைவாக பேசுவது என்பது நல்லதல்ல. திமுக ஜனநாயக கட்சி இல்லை ஜமீன்தார் கட்சியாக மாறிவிட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லி ஒரு பக்கம் விமர்சனம். ஒரு கூட்டத்தில் அந்த தெரு நாயை பிடித்து வெளியே போடுங்கள் என்று சொல்வது மூலம் எந்த அளவுக்கு அந்த கட்சி தொண்டர்களை பார்க்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். கட்சி தொண்டரை மதிக்கின்ற உலகத்தில் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான்.

குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை ஆனால்ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும் .ஒசாமா பின்லேடன் , டிரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இது ஒரு ஏமாற்று வேலை திமுகவின் மானம் கப்பல் ஏறுகிறது, அனைத்து பெருமையும் பிரசாந்த் கிஷோருக்கே சேரும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.