தற்போதைய செய்திகள்

அரசியலுக்கு லாயக்கற்றவர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

சென்னை

நாட்டுக்கு அவர் செய்த சேவையை பட்டியலிட முடியுமா? என்றும் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் உதயநிதி என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை மின்னாளுமை ஆணையரகத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பானஅனைத்து திட்ட பணிகள் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.சைபர் குற்றங்களை தடுக்கவும் தேவையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர்களுக்குப் பேரிடர் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழக செயற்குழுவில் 15 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தின் உரிமைகளை காப்போம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர பல்வேறு வியூகங்களைத் தலைமை வகுத்து வருகிறது.

இதனை வெளியில் சொல்ல முடியாது. உதயநிதி இன்றும் அரசியலில் பக்குவம் அடையவில்லை. இன்னும் சொல்லபோனால் அரசியலுக்கு லாயக்கு இல்லை. அவர் என்ன சேவை செய்தார் இந்த நாட்டுக்கு. முதலில் இதனை பட்டியிலிட்டு சொல்லவேண்டும். நான் ஒரு சாமானிய தொண்டர். என்னைப்போல ஆயிரம், ஆயிரம் சாமானிய தொண்டர்கள் இந்த இயக்கத்தில் உள்ளார்கள்.தலைமைக்காகச் சிறை சென்றுள்ளோம். நாட்டுக்காக சிறை சென்றுள்ளோம். மொழிபோருக்காக பாடுபட்டுள்ளோம்.உரிமைக்காக போராடியுள்ளோம். இவர் எந்த போராட்டத்தை நடத்தினார்.

எந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். இவருக்கு எடுத்த உடனே இளைஞர் அணி பதவி எதன் அடிப்படையில் தரப்பட்டது. இதனை அங்கு இருப்பவர்கள் யாரும் கேட்பதில்லை. எல்லோரும் மவுனமாக உள்ளார்கள். அவரை முன்மொழிந்தால்தான் நமக்கு வாய்ப்பு என்று உள்ளார்கள். அவர் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார் என்று சொல்கிறார்கள்.அவர் பாகிஸ்தான் சென்று போட்டியிட்டு வெற்றி பெறுவரா. புகழ்வதற்கு ஒரு அளவு இல்லையா. அதற்காக அவர் வரம்பு மீறி பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது.திராவிட இயக்க பாரம்பரியத்தில் பெரியவர்களை வரம்புமீறி பேசமாட்டார்கள்.மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து பேசுவது சரியாக இல்லை.