தமிழகம்

குடியரசுத் தலைவர் பிறந்த நாள் முதல்வர் ,துணை முதல்வர் வாழ்த்து

சென்னை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி மலர்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:-

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது அன்பான வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தேசத்திற்கு நீண்ட நாள் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசத்துக்கும், மக்களுக்கும் அவர் அளித்த மதிப்புமிக்க தன்னலமற்ற சேவையைத் தொடர அவருக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்குமாறு அவரது பிறந்தநாளில் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.