தற்போதைய செய்திகள்

மக்களின் அடிப்படை தேவைகளை கழக அரசு நிறைவேற்றி தரும் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உறுதி

சென்னை

மக்களின் அடிப்படை தேவைகளை கழக அரசு நிச்சயமாக நிறைவேற்றி தரும் என்று பொதுமக்களிடம் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் உறுதி அளித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பெரியார் நகர், கோவிந்தாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அப்போது மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் நடைபெற்று வரும் நமது அ.தி.மு.க. தலைமையிலான நல்லாட்சி அம்மா அவர்களது நல்லாசியுடன் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தங்களின் உன்னதமான கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் தெரு, மா.பொ.சி.தெரு, எம்ஜிஆர் தெரு, பாரதி தெரு கோவிந்தசாமி நகர், திருவள்ளுவர் சாலை உள்ளடங்கிய 400 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் ரேஷன் கடை, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் அமைத்தல் சி.சி.டி.வி, கேமரா அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும். இதேபோன்று ஆதி ஆந்திரா பகுதி, சத்தியமூர்த்தி நகர், ஜீவா தெரு, உள்ளிட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு அடிப்படை வசதிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்கள் இருந்த போது மக்கள் தேவைகளை உணர்ந்து எப்படி அரசு செயல்பட்டதோ அவ்வகையில் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் கூட சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிலேயே முன்மாதிரி அரசாக கழக அரசு திகழ்கிறது என்றார்.

இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்தனம், வட்ட செயலாளர் ஏ.வினாயகமூர்த்தி, எம்.என்.சீனிவாசபாலாஜி, எம்.வேலு, எல்.எஸ்.மகேஷ்குமார், டி.ஜே.சுரேஷ், ஏ.சேகர், செல்வி, பொன்னுரங்கம், சக்திவேல், சரவணன் மற்றும் ஊர் நிர்