தமிழகம்

காந்தியடிகளின் வழியில் அன்பால் அனைவரையும் வழி நடத்துவோம் – துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

காந்தியடிகளின் வழியில் அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான இந்நன்னாளில் அண்ணல் காந்தியடிகளின் தியாகங்களையும், நாட்டுப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.