தற்போதைய செய்திகள்

சேவூர் அரசுப்பள்ளியில் ரூ.10.50 லட்சத்தில் பேவர் பிளாக் தரை அமைக்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அரசுப்பள்ளியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தரை அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முயற்சியால் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் மேல்நிலைபள்ளிக்கு மூன்று அடுக்கில் புதிய பள்ளி கட்டடமும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேலும் பள்ளிக்கு வெளிப்பகுதியில் பேவர் பிளாக் தரை அமைத்து தரும்படி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத், மற்றும் இயக்குநர்கள், ஆசிரியர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர் அதிகாரிகளை அழைத்து பேவர் பிளாக் தரை அமைக்க மதிப்பீடு செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.மேற்கண்ட பணிக்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு பேவர் பிளாக் தரை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தரை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், ஆவின் மாவட்ட துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், வி.பி.இராதாகிருஷ்ணன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜெ.சம்பத், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், பெருமாள், கிளை செயலாளர் பாலசந்தர், ஒப்பந்ததாரர் பழனிவேலு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆர்.பிரமிளா, உதவிப்பொறியாளர் க.பன்னீர்செல்வம், பள்ளியின் தலைமையாசிரியர் வி.மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.