தமிழகம்

அகிம்சையின் மகத்துவத்தை உலகறிய செய்தவர் காந்தி – முதலமைச்சர் புகழாரம்

சென்னை

அகிம்சையின் மகத்துவத்தை உலகறிய செய்தவர் அண்ணல் காந்தியடிகள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.