சிறப்பு செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் நினைவகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

சென்னை

பெருந்தலைவர் காமராசரின் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராசரின் நினைவகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது நினைவு தினத்தன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று பெருந்தலைவர் காமராசரின் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவகத்தில் அமைந்துள்ள சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.