தற்போதைய செய்திகள்

நடமாடும் ரேஷன் கடைகள் தொடக்கம், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் – வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பெருமிதம்

திண்டுக்கல்

நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கி இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி பரமசிவம் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி தம்மனம்பட்டி, கருக்காம்பட்டி ஆகிய கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் சேவை தொடக்க விழா நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் ெதாகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்கி நடமாடும் ரேஷன் கடை சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 47 நடமாடும் ரேஷன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படுத்தி வருகின்ற கழகத்திற்கு என்றென்றும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசினார்.

விழாவில் வேடசந்தூர் நகர கழக செயலாளர் பாபு சேட், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நிலா தண்டபாணி, வேடசந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், ஊராட்சி மன்ற செயலாளர் பிரேம்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் சேட்டை கார்த்திக், வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, வேடசந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சார்பதிவாளர் சவுந்தரராஜன், செயலாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோன்று கொன்னாம்பட்டியில் சேணன் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் நடமாடும் ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தொ