சிறப்பு செய்திகள்

அரசு பணியாளர் காலனியில் உள் விளையாட்டு அரங்கம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை

கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாகராட்சி தெற்கு மண்டலம் 87-வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி, 88-வது வார்டு கங்கா நகர் பகுதியில் ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டிலும், அரசுப் பணியாளர் காலனி பகுதியில் ரூ.51.92 லட்சம் மதிப்பீட்டிலும், 93-வது வார்டு பூந்தோட்டம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும், அன்னை நகர், இ.பி.காலனி, பாலு அவென்யூ, பேஸ்-2 மற்றும் பார்க் டவுன் பகுதிகளில் ரூ.70.50 லட்சம் மதிப்பீட்டிலும் தார் சாலை அமைக்கும் பணிகள்,

88-வது வார்டு அரசுப் பணியாளர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உழைக்கும் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை 15 பேருக்கு வழங்கினார்.

மேலும் அனைத்து இடங்களிலும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு மற்றும், கபசுரக்குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இதன் பின்னர் அமைச்சர் 88-வது வார்டு அரசு பணியாளர் காலனியில் உள்ள நகர் நல மையத்தில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கு.செல்வராசு, பகுதி செயலாளர்கள் த.மதனகோபால், வி.குலசேகரன், பகுதி தலைவர் எஸ்.எம்.உசேன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் இகே.பழனிசாமி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கேவி.முனுசாமி, வக்கீல் சிவகுமார், ஆர்.சசிகுமார், பகுதி நிர்வாகிகள் அருணகிரிநாதன், சிந்து அகல்யா, செல்வி, வார்டு செயலாளர்கள் கேபி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், சந்தோஷ், ஜாஸ் ஜெகதீஸ், மணல் நாராயணன், பாப்பண்ணன் மற்றும் முந்திரி கோபால், ஆர்.இளங்கோ, கேசி.ஆ.செல்வகுமார், ஆர்.தேவராஜ், வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.