மதுரை

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் அறிவிப்பு – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் கொண்டாட்டம்

மதுரை

முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, ஊமச்சிகுளம் ,மேலூர், கொட்டாம்பட்டி நிலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட கழகம் சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்து, சாலையோர வியாபாரிகளுக்கும், பஸ்சில் பயணம் செய்த பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச்செயலாளர் இரா.முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கலை பிரிவுச்செயலாளர் செல்வகுமார், மற்றும் பொன்முருகன், திருநகர் பாலமுருகன், கர்ணா, கருத்துமுத்து, முருகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதால், வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர இரட்டைஇலைக்கு நாங்கள் வாக்களிப்போம். மூன்றாவது முறையாக அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று தெரிவித்தனர்.