தற்போதைய செய்திகள்

திண்டிவனத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை – அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு

விழுப்புரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கிடங்கல் (சர்ச்),ரோசனைபாட்டை, பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் சஞ்சிவீராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செஞ்சி, வானூர் ஆகிய பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை மேற்கொள்ள ஆலோசனை வழங்கி, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுகளுக்கும் மற்ற சிகிச்சை பிரிவுகளுக்கும் நடுவில் உறுதியான தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளை காலை மற்றும் மாலை ஆக இரண்டு வேளைகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட வேண்டும். இப்பணிகளை அந்தந்த வார்டு பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பழைய நகராட்சி கட்டிடத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் மேற்கொள்ள போதுமான இடவசதிகள் உள்ளதா என்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வினில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.