தற்போதைய செய்திகள்

கடலில் கரைத்த பெருங்காயம் போல் திமுக நிலைமை மாறிவிட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

கடலில் கரைத்த பெருங்காயம் போல் திமுக நிலைமை ஆகிவிட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை விமானநிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்ட் 7-ந்தேதி கரை திரும்பாத காரணத்தால் மத்திய அரசின் உதவியுடன் கடலோர காவல்படை அண்டை நாடுகளின் உதவியை நாடினோம். மீனவக் குடும்பங்களை நான்கு முறை சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தோனேசியா பர்மா மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கும் தகவல் கொடுத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்மாறு வலியுறுத்தினோம்.

மீனவர்கள் சென்ற படகில் தொலைத்தொடர்பு வசதி இருந்ததாகவும் படகின் இஞ்சின் பழுதடைந்த காரணத்தினால் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்தியாவிற்கு திரும்ப படகை மீட்டு கொண்டுவர சரிசெய்யும் முயற்சி செய்யும்போது மீனவர் பாபு காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற முடியாது கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கு

நிதி தன்னாட்சி என்பது முக்கியமான ஒன்று. ஆனால் நிதி தன்னாட்சியை சீர்குலைத்த ஒரு கட்சி ஆட்சி, திமுக. நிதி தன்னாட்சியை விட்டுக்கொடுத்து கொத்தடிமையாக இருந்தது திமுக காங்கிரஸ் கூட்டணியாக இருக்கும் போதுதான் என்றார். தொடர்ந்து கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொது மக்கள் இடையே மக்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. 2021 கழகம் தொடர்ந்து ஆட்சிக்கு வரும், 2021 ல் மீண்டும் தற்போதைய முதலமைச்சர் தான் மீண்டும் தமிழகத்தை ஆள்வார்.

திமுகவுடன் கூட கூட்டணி அமையலாம் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் பேச வேண்டும். ஆனால், அக்கட்சியில் ஆளாளுக்கு கூட்டணி குறித்து பேசுகின்றனர். தமிழ்நாட்டை கொள்ளையடித்து பாதாளத்திற்கு தள்ளியது திமுகதான். பணக்கார குடும்பமாக உருவெடுத்ததுதான் அவர்களின் ஒரே சாதனை. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த திமுக, அதிமுகவை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.கடலில் கரைத்த பெருங்காயம் போல இன்று திமுகவின் நிலைமை ஆகிவிட்டது.என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.