சென்னை

சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டியடிப்போம் – பொதுமக்களுக்கு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. விழிப்புணர்வு

சென்னை

சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டியடிப்போம் என்று பொதுமக்களுக்கு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் வழித் தொடரும் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் தொகுதியில் 128-வது வார்டில் அரங்கநாதன் நகர், தாங்கள் உள்வாய்தெரு, ஆகியத் பகுதிகளில் உள்ள தெருக்களின் பெயர்பலகைகளை அமைப்பதற்கு அந்த பகுதி மக்களின் வேண்டுகோளையும் ஏற்று தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளாரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி தனது சொந்த நிதியில் அமைக்க ஏற்பாடு செய்து தற்போது அந்த பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழித்தொடரும் அரசு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது, தமிழக அரசு கடைக்கோடி மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் வலையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறைகளையும் பின்பற்றி கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் முககவசம் அணிவது அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றவேண்டும் நாம் அனைவரும் பொது இடங்களில் செல்லும் போது கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் வி.என்.கண்ணன், ஏ.எம்.காமராஜ், வட்டகழகச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, வி.என்.பன்னீர், தனசேகர், எஸ்.பி.குமார், ஏ.ஆர்.இனியன், மாறன், ஏ.அண்ணாமலை, பி.டி.சி.மோகன், போட்டோ.முருகன், செல்லா, வரதன், ரமேஷ், முத்து, பில்டர்.மோகன், மற்றும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுரக்குடிநீர், முககவசம், கிருமி நாசனி வழங்கபட்டது.