தமிழகம்

வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வாகன உற்பத்தி துறையில் இந்திய அளவில் தமிழகம் 25 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. வாகன உற்பத்தித் துறையில் அதிக வளர்ச்சியை கொண்டுவர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

தமிழகம் வாகன உற்பத்தியில் தலைமை வகிக்க தற்போதைய நிலை மேலும் ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.