தற்போதைய செய்திகள்

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலையணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

திருநெல்வேலி 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நேற்று அன்னாரது திருவுருவசிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தியாகிகள் தினமான நேற்று சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாளாக கொண்டாடிட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்றவிழாவில் அவரது திருவுருவ சிலைக்கு தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டபங்கள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் தியாகிகள் தினமான ஜூலை 17 அன்று சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாளாக கொண்டாடிட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து ஆண்டுதோறும் ஜூலை 17 அன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்வில் தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம், தாய்கோ வங்கி மாநில துணைத்தலைவர் குற்றாலம் சேகர், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவர் சண்முகசுந்தரம், ஊத்துமலை கூட்டுறவு சங்கத்தலைவர் பாண்டியன், தென்காசி மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் மயில்வேலன்,தென்காசி அக்ரோ துணைத்தலைவர் சாமிநாதன், முக்கிய பிரமுகர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.