தற்போதைய செய்திகள்

ராமதாஸ், ஜி.கே.வாசனுக்கு, முதலமைச்சர் நன்றி

சென்னை

தனக்கு வாழ்த்து தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.வாசன் எம்.பி ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ச.ராமதாசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.இ.அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி இன்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.இ.அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜி.கே.வாசனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.