தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு – துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு இரங்கல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

மத்திய நுகர்வோர் மற்றும் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு அவர்கள் இத்துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர சக்தியைத் தரவேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.