தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்

சென்னை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த லோக் ஜனசக்தி கட்சி நிறுவனர், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.