தற்போதைய செய்திகள்

நெகிழியால் தானியங்கி கிருமிநாசினி கருவி வடிவமைப்பு – கோவை மாணவனுக்கு, அமைச்சர் வாழ்த்து

சென்னை

கொரோனா பரவலை தடுக்க மறுசுழற்சி செய்யும் நெகிழியால் தானியங்கி கிருமிநாசினி கருவியை வடிவமைத்த கோவை மாணவனுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை, காந்திபுரத்தைச் சோ்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மகிழன், கொரோனா பரவலைத் தடுக்க மறுசுழற்சி செய்யும் நெகிழியால், தானியங்கி கிருமி நாசினி கருவியை வடிவமைத்து, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வழங்கிய செய்தி வியப்பளிக்கிறது. மேலும் பல சாதனைகள் படைத்து கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.