வேலூர்

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு – ராணிப்பேட்டை மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நன்றி

வேலூர்

ராணிப்பேட்டை மாவட்ட கழக சார்பில் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்து அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ஆர்.ஜி.கே.நந்தகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட கழக நிர்வாகிகள் கீதா சுந்தர், ரமாபிரபா, சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரும், வக்பு வாரிய தலைவருமான அ.முஹம்மத்ம ஜான் எம்.பி.,
ஜி.சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை கோட்டை பக்கமே தீயசக்தி கருணாநிதியால் வர முடியவில்லை.மூன்று முறை முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அவரது வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி கழகம் என்ற பேரியக்கத்தை வளர்த்தார்.

முதலில் பிரிந்த இயக்கத்தை மீண்டும் ஒன்று சேர்த்து, இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டு தமிழகத்தில் ஆட்சி அமைத்த பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களை சாரும். பிரிந்த இயக்கம் இணைந்ததாக சரித்திரமில்லை. ஆனால் கழகம் என்ற பேரியக்கம் இரண்டு முறையும் பிரிந்து மீண்டும் இணைந்து தமிழகத்தில் வரலாற்று சாதனை படைத்து பொற்கால ஆட்சி நடத்தி வருகிறது.

தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். திமுகவினருக்கு நேரடியாக மோத திராணி, தைரியம் கிடையாது. ஆட்சி அதிகாரம் இல்லாத போதே திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். கழக நிர்வாகிகள் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு கழக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறவேண்டும்.

இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

கொரோனா வைரஸ் நோயிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கழக முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை ஒருமனதாக தேர்வு செய்தமைக்கு கழக ஒருங்கிணைப்பாளருக்கும், துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.