தற்போதைய செய்திகள்

சென்னை கொருக்குப்பேட்டையில் தற்காலிக இணைப்பு சாலை திறப்பு

சென்னை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி கொருக்குப்பேட்டை 41 வட்டம் மணலி சாலை கெனால் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் அம்மா வார சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் கொருக்குப்பேட்டை எழில் நகர், நேருநகர், இணைப்பு மேம்பாலம் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இணைப்பு சாலை ஒன்றை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் பாரதி நகர், மீனாம்பாள் நகர், ஜெ.ஜெ.நகர், சத்தியமூர்த்தி நகர், ஜீவா நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிக்கு தற்காலிக இணைப்பு சாலை திறக்கப்பட்டது. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையில் பொதுமக்களே ரிப்பன் வெட்டி இணைப்பு சாலையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் விக்டர், பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், வட்ட செயலாளர்கள் ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், எம்.நாகூர்மீரான், எம்.என்.சீனிவாசபாலாஜி, டி.ஜே.சுரேஷ், ஏ.சேகர், பி.பாபுராஜ், சு.ராஜி, ஏ.சரவணன், பிரதாப்சந்திரன், மணல் ஜெ.ரவிச்சந்திரன், லயன் ஜி.குமார், கே.என்.கோபால் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.