தற்போதைய செய்திகள்

ஆரணி எஸ்.வி.நகரத்தில் புதிய சாலை பணி விறுவிறுப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

ஆரணி எஸ்.வி.நகரத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் இருந்து மைனந்தல், மட்டதாரி ஆகிய கிராமங்களுககு செல்லும் பாதை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனை சந்தித்து புதிய சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 1705 மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேற்று எஸ்.வி.நகரத்திற்கு வந்து சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறு பாலங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, பொறியாளர் மது, மாவட்ட கழக பொருளாளர் அ.கோவிந்தராசன், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் அரையாளம் எம்.வேலு, நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், தகவல் தொழில் நுட்பபிரிவு சரவணன், முன்னாள் கவுன்சிலர் புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.