நாகப்பட்டினம்

பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று குறை தீர்க்கும் போலீசார் – நாகப்பட்டினம் காவல்துறை புதிய முயற்சி

நாகப்பட்டினம்

காவல் நிலையங்களுக்கு வந்து புகார் அளிக்கும் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

04.10.2020 ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் நேற்று வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது நேரடியாக புகார்தாரர்கள் வீட்டிற்கே சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு விரைவாக செயல்பட்டு உடனுக்குடன் தீர்வு காண்பது பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் நல்ல நட்புறவு ஏற்படுத்தும் விதமாகவும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் உள்ளது. இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 78 மனுக்களுக்கு இம்முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.