தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடுநடை – அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர்

கழக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியம் காரணப்பட்டு ஊராட்சியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணையும் விழா பாதிரிக்குப்பத்தில் உள்ள கடலூர் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மத்திய மாவட்ட கழக துணைசெயலாளர் தெய்வ.பக்கிரி தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வ.அழகானந்தம் முன்னிலை வகித்தார். கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் விலகி தங்களை கழகத்தில் இணைந்தனர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் கழக சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

நமது கழகத்தில் மட்டும் தான் ஜனநாயகம் வேரோடி கிடக்கிறது. இந்த கட்சியில் மட்டும் யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்புக்கும் வரலாம். இங்கு உழைப்பவர்களுக்கு உயர்வுண்டு. விசுவாசமாக இருப்பவர்களுக்கு பதவி உண்டு. தமிழகத்தில் எண்ணற்ற இளைஞர்கள் நமது கழகத்தில் மட்டுமே உள்ளனர். இளைஞர்களின் ஆற்றலை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா அவர்கள் நமது கழகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்பையே ஏற்படுத்தினார்.

கடந்த 2011-16-ம் ஆண்டு நடைபெற்ற அம்மாவின் ஆட்சியின் சாதனைகளே 2016-ம் நடந்த தேர்தலில் நம்மை வெற்றி பெற வைத்தது. அதேபோன்று 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தற்போதைய ஆட்சியின் சாதனைகளை நம்மை வெற்றி பெற வைக்கும். கழக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் உலகமே முடங்கிய சூழ்நிலையில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது.

மாணவர்களின் நலனில் கழக ஆட்சி எப்போதுமே தனி கவனம் செலுத்தி வருகிறது புரட்சித்தலைவரின் ஆட்சியில் சத்துணவு திட்டமும், அம்மாவின் ஆட்சியில் மடிக்கணினி திட்டம் அதற்கு சான்றாகும். இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் இல்லை. இன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தும் பல ஏழை மாணவர்களின் மருத்து கனவுகளை நனவாக்கி கொண்டு வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதனால் தான் கல்லூரி மாணவர்கள் அலைஅலையாய் கழகத்தில் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கு இன்று இணைந்துள்ள நீங்கள் இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழகம் 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்நிகழ்வில் கடலூர் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆர்.ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தே.பெருமாள், அம்மா பேரவை இணைச் செயலாளர் இராம. வேல்முருகன், , மாவட்ட கவுன்சிலர்கள் கல்யாணி ரமேஷ், தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், கீழ்அழிஞ்சிபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.கே.ஆர்.ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கமல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.