திருவள்ளூர்

100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

திருநிலை ஊராட்சியில் நடைபெற்ற குறை கேட்பு முகாமில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணை வட்டாட்சியர் செல்வகுமார், மண்டல வட்டாட்சியர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த முகாமில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் செல்வகுமார், மண்டல வட்டாட்சியர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், 15-வது வட்ட கழக செயலாளர் காமராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நீதி, மாணவரணி மணிநீதி, நரேந்திரன், பாசறை செயலாளர் முரளி, கிளை கழக நிர்வாகிகள் செந்தில், மாணவரணி வெங்கடேசன், கிளை கழகச் செயலாளர் காமராஜ், கிளை செயலாளர் விஜயகுமார், கிளை பிரதிநிதி கோகுல், மாணவரணி நிர்வாகிகள் காமேஷ், சூர்யா, கிரண்குமார் ரெட்டி, இமான், விவேக், தியான், பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.