தென்காசி

தென்காசியில் கரையும் தி.மு.க. காங். கூட்டணி – செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் 150 பேர் கழகத்தில் இணைந்தனர்

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. காங்கிரசிலிருந்து 150 பேர் விலகி மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

தென்காசி மாவட்ட கழக செயலாளராக ெசல்வமோகன்தாஸ் பாண்டியன் பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி ஒன்றியம் காசிமேஜர்புரம் குற்றாலம் 1-வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலர் மாடசாமி தேவர், திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தேவர், சமுதாய நாட்டாமை குமாரசுவாமி உட்பட சுமார் 150க்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி குடும்பத்தினருடன் தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

கழகத்தில் இணைந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று அவர்கள் மத்தியில் மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பேசுகையில், பொதுநலவாதிகள் முக்கியத்துவம் பெறுவது அதிமுகவில் மட்டும் தான். திமுகவை பொறுத்தவரை பத்திரம் போட்டு கொடுத்ததை போல இந்தந்த தொகுதிக்கு இவர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு அதன்படியே நடந்து வருகிறது. ஆனால் அதிமுகவில் அடிமட்ட தொண்டரும் உயர்ந்த நிலைக்கு வருவது சாத்தியமாகும். அதற்கு எடுத்துக்காட்டு தான் விவசாயி மகன் முதல்வர் ஆனது. அதைப்போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதும் அதிமுக மட்டுமே. இங்கு அதிக அளவில் பெண்கள் கழகத்தில் இணைய வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் சண்முகசுந்தரம், குற்றாலம் அம்மா பேரவை இணை செயலாளர் சாமிநாதன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், காசிமேஜர்புரம் ஸ்ரீதர், கனிராஜ், எபன்குணசீலன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் தென்காசியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கரையத் தொடங்கியிருக்கிறது.