கோவை

சோமையம்பாளையம் ஊராட்சியில் ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் – எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி- பி.ஆர்.ஜி.அருண்குமார் பூமி பூஜை

கோவை

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் உள்ள குப்ப நாயக்கன்பாளையம், கணுவாய் அஜந்தா நகர், நவாவூர், ஹரிணி கார்டன், கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலைகள், வடிகால் அமைப்பு, தார் சாலைகள், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது உள்ளிட்ட மொத்தம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.