தற்போதைய செய்திகள்

கழக அரசின் சாதனை திட்டங்களால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் – வி.பி.பி.பரமசிவம் பெருமிதம்

செங்கல்பட்டு

கழக அரசின் சாதனை திட்டங்களால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது எனறு இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் பெருமிதத்துடன் கூறினார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கழகத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கி இருப்பதால் தான் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகளவில் இணைகின்றனர். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிகணினி, திருமண நிதிஉதவி, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட ஏனைய திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கொரோனா காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியது அம்மாவின் அரசு. உலக அரசியலிலேயே தாய்பாலுக்கு வங்கி உருவாக்கியது அம்மாவின் அரசு. தமிழ்நாட்டில் மட்டும் தான் படிப்பிற்கு பணம் தேவையில்லை என்ற நிலை உள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை இன்றைக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களும், தொழில் வாய்ப்புகளும் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

துண்டுச்சீட்டும் துரைமுருகனும் இல்லை என்றால் ஸ்டாலின் என்பவரே கிடையாது. பதவிக்காக யாருடைய காலிலும் விழும் வரலாறு திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் உள்ளது. இந்த இயக்கத்தில் நீங்கள் இணைந்திருப்பதன் வாயிலாக வருங்கால சந்ததிகளுக்கு நல்வழி வகுத்துள்ளீர்கள்.

இவ்வாறு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ பேசினார்.

இந்த கூட்டத்தில் கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார் மாவட்ட மகளிர்அணி செயலாளர் மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.எஸ். ராஜி, வாசுதேவன், பூவராகமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட கழக இணை செயலாளர் லீலாவதி அகோரம், மாவட்ட கழக துணை செயலாளர்கள், எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் எ.விஜயரங்கன், இ.கிருஷ்ணமூர்த்தி, பி.சுப்பிரமணியன், தையூர் எஸ்.குமரவேல், கோ.அப்பாதுரை, விவேகானந்தன், கார்த்திகேயன், ரஞ்ஜன், நந்தகுமார், டாக்டர். பிரவின்குமார், கணேசன், கிருபாநிதி, டி.கே.வினாயகம், கங்கையமரன், உமாசங்கர், அனந்தகிருஷ்ணன், சல்குரு, கோவிந்தசாமி, ஜி.ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.