ஈரோடு

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நீடிக்க கழகத்துக்கு ஆதரவளிக்க மக்கள் தயார் – கே.வி.ராமலிங்கம் பேச்சு

ஈரோடு

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நீடிக்க கழகத்துக்கு ஆதரவளிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு மாநகர் மாவட்டம் ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் கவுண்டிச்சிபாளையம் ஊராட்சியில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2008-ம் ஆண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை தொடங்கினார். கழகத்தில் ஏராளமான இளம்பெண்களும், இளைஞர்களும் உறுப்பினராக இணைந்தார்கள். இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் கடினமாக உழைத்தனர். அம்மா ஆட்சியின் சாதனைகளைபொது மக்களிடம் எடுத்து சென்றனர். இதன் காரணமாக கழகம் 2011, 2016-ல் மாபெரும் பெற்றி பெற்றது.

இதேபோல் வரும் 2021-ம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வின் அராஜகங்களையும், கழக அரசின் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர் வீடு வீடாக எடுத்து செல்ல வேணடும்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை போல புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கலுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.100 வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கினார். குடிமராமத்து பணிகள் மூலம் ஆறு, குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட்டு நீர் நிலைகள் மேம்பாடு செய்யப்பட்டு குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றும் போது எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார். அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அம்மா அரசுக்கு நல்லா தரவு அளிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஒன்றிய கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் மணி (எ) சின்னசாமி, மாவட்ட கழக பொருளாளர் வி.பி.அப்பாதுரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பி.கேசவமூர்த்தி, கே.ராமசாமி, அரசு வழக்கறிஞர் துரை சக்திவேல், தலைமை கழக பேச்சாளர் ஈரோடு ரவி, ஆர்.டி.சுமன், மனோஜ், வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.